திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விளக்கம் அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
திறைசேரி முறிகள் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டன. மேலும் இதுதொடர்பில் பிரதமர் குறிப்பிடுகையில், ஏனைய ஆணைக் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய, மத்திய வங்கி சட்டங்கள் திருத்தப்படவிருக்கின்றன. மத்திய வங்கி மீளக் கட்டமைக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில்,
மக்களின் பணத்தை தமக்கு ஏற்ற வகையில் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் காலமும் இருந்தது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் திறைசேரி தொடர்பான கொடுக்கல் வாங்கலினால் அரசாங்கத்திற்கு 806 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. ஹெஜ்ஜிங் கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட நட்டம் ஆயிரத்து 140 கோடி ரூபாவாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐரிஎன் அலைவரிசையில் விளம்பரங்களை ஒளிபரப்ப 23 கோடி ரூபா செலவானதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment