அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனம் இடைநிறுத்தம்

அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள டப்ளியூ.எம். மெண்டிஸ் அன் கோ (W.M. Mendis & Co) மதுபான நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தால், மது வரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய வரி, உரிய காலத்திற்குள் செலுத்தப்படாததன் காரணமாக குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவின் பணிப்பாளரால் கடந்த ஜனவரி 05 ஆம் திகதி முடக்கப்பட்டதோடு, தொடர்ந்தும் குறித்த தீர்மானம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment