என் தந்தை மர்ஹூம் இலங்கை நெய்னார் அவர்கள் இலங்கையில் பல தலைவர்களுடன் நெருக்கமான உறவைப்பேணி வந்தவர் அதேபோல் மாமனிதர் MHM அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னர் தலைவர் Rauff Hakeem அவர்களுடன் நட்பை பேணி வந்தார்.
தலைவர் Rauff Hakeem அவர்கள் சில காலமே என் தந்தையுடன் பழகி இருந்தாலும் 30/07/2004 அன்று அதிகாலையில் என் தந்தையின் மரண செய்தி கேள்விபட்டு இலங்கையில் இருந்து உடனடியாக சென்னைக்கு விமானம் முலம் வந்தடைந்து சகோதரர் Manavai Asokan அவர்களுடன் வந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
அதன்பிறகு இலங்கை வந்தபிறகு அவர் தலைமையில் என் தந்தைக்கு ஒரு இரங்கல் கூட்டமும் நடத்தினார்.
எத்தனையோ பேர் என் தந்தையிடம் உதவிகள் பெற்றவர்கள் கூட அவரை மறந்துவிட்ட நிலையில் அன்று சென்னைக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் இன்றும் நான் சந்திக்கும் தருணங்களில் என் தந்தையை நினைவு கூறும் தலைவர் Rauff Hakeem அவர்களின் அந்த உயரிய பண்பு ஒன்றே என்னை அவர்பால் எப்போதும் அன்பு கொள்ள செய்கிறது.
இம்றான் நைனார்,
பொதுச்செயலாளர்
இலங்கை நெய்னார் சமூக சேவை காப்பகம்,
கொழும்பு.
No comments:
Post a Comment