லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து

மத்திய தரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் புக சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது. லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 90 பேர் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக என ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது.

இதுவரையில் லிபியா கடற்பகுதியில் 10 பேரது சடலம் கரை ஒதுங்கி உள்ளது எனவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அசாதரமாண சூழ்நிலை நிலவும் நிலையில் மக்கள் அகதிகளாக மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்கின்றனர். இதன் போது அதிகமான மக்களை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது தொடர்ச்சியான சம்பவமாக இருந்து இருந்து வருகிறது.

No comments:

Post a Comment