பாடசாலைக் கட்டணத்தைக் கட்டத் தவறிய மாணவியை ஆசிரியை அவமானப்படுத்தியதால், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹைதராபாத், மல்காஜ்கிரியில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பாடசாலையின் ஒன்பதாம் வகுப்பு மாணவியான சாயி தீப்தி (14), பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்தியிருக்கவில்லை. இதையடுத்து, அதை மற்ற மாணவ, மாணவியர் முன் அம்பலப்படுத்திய ஆசிரியை, பரீட்சை எழுத அனுமதிக்காததுடன், பரீட்சை முடியும் வரை வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், தன் தங்கையிடம் நடந்ததைக் கூறிய தீப்தி கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயம், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அக்கடிதத்தில், ‘அவர்கள் என்னை பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. மன்னித்து விடுங்கள் அம்மா’ என்று எழுதியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment