உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் சூடு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தேர்தல் 2018 வித்தியாசமானது. வட்டார முறையில் நிகழும் தேர்தல் என்பதால் கறைபடிந்த மனிதர்களுக்கான செல்வாக்கு சரிகின்றது. பண்பாடான மனிதர்கள் பலர் புதிதாக களம் இறங்கியுள்ளார்கள். இந்தப் புதிய மாற்றம் கறை படிந்த மனிதர்களது வயிற்றில் புளியை கரைத்திருக்கின்றது.
செல்வாக்கு பெறும் ஆளுமைகள் மீது, பண்பாடான ஆளுமைகள் மீது சேறு வாரி இறைக்கப்படுகின்றது. அந்தப் புதிய ஆளுமைகளுக்கு சில விடயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஹுத்ஹூத் கொடுத்த தகவல்கள் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு பிரயோசனமாக இருந்தது போலவே, நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு பிரயோசனமாக இருக்கலாம்.
1. நீங்கள் ஒரு புதிய போராட்டத்தில் இணைந்திருக்கின்றீர்கள். எனவே நீங்கள் சந்திக்கும் சோதனைகளும் வித்தியாசமானவையாக இருக்கும். சாக்கடையை சுத்தம் செய்யும் உங்களது முயற்சியில், உங்கள் மீது சேறு பூசப்பட்டிருக்கும். அவற்றை எதிர்கொள்வதற்கான பொறுமையை அல்லாஹ் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதலில் நாம் அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம்.
2. நீங்கள் மன்னித்துப் பழகியவர்கள். உங்கள் மீது அவதூறு பரப்பும் மனிதர்களை நீங்கள் மன்னித்துவிட தயாராக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் அவர்களை மன்னித்துவிட்டால், அடுத்தமுறையும் அவர்கள் இதே வேலையை செய்வார்கள். பண்பாடான மனிதர்கள் அரசியலுக்கு வர பயப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவர்களை பயப்பட வைக்கும். அடுத்ததடுத்து வரும் தேர்தல்களில் அவதூறுகளின் செல்வாக்கு குறையும். நாம் அவர்களை மன்னித்துவிட்டால், இந்த நல்ல மாற்றம் ஏற்படுவதற்குத் தடையாக நாமே இருந்துவிடுவோம். வித்தியாசமான போராட்டத்தில் தேவைப்படும் வித்தியாசமான அணுகுமுறையை பொறுமையோடு முன்னெடுப்போம்.
பொறுமையோடு போராடுபவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்குவான். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வெற்றியைத் தருவானாக.
ஹுஸ்னி ஜாபிர்
No comments:
Post a Comment