பெரும்போக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நிர்ணய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பி. ஹரிசன் ஆகியோரால் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முன்வைக்கப்ப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடு ஒரு கிலோ 38 ரூபா வீதமும், சம்பா/ கீரி சம்பா ஒரு கிலோ 41 ரூபா வீதமும் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஆகக் குறைந்த நிர்ணய விலையினை உறுதி செய்வதற்காக அரச தலையீடு அவசியப்படுகின்ற மாவட்டங்களில் குறித்த நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குறித்த நெல்லை, விற்பனை சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகத்தின் ஊடாக அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment