நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் மொனிக்கா ஸ்வென்ஸ்குருட், தூதரக அதிகாரி பிரடறிக் அசாரன் மற்றும் சிரேஸ்ட ஆலோசகர் வித்யா பெரேரா ஆகியோர் வட மாகாண சபை பிரதம செயலாளர் அ.பத்திநாதனை சந்தித்தனர்.
பிரதம செயலாளர் செயலகத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நோர்வே தூதுக்குழுவினர் பிரதம செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது பிரதம செயலாளரினால் நோர்வே தூதுக்குழுவினருக்கு வடக்கு மாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment