இலங்கை சுதந்திரமடைந்து 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய எலிசபெத் மகாராணியின் விசேட வாழ்த்துச் செய்தியில்,
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று நிகழ்வில் தனிப்பட்ட முறையில் பங்குபற்ற கிடைக்காததையிட்டு கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள மகாராணியார், இந்த நிகழ்வுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரான இளவரசர் எட்வேட் தம்பதியினரை பங்குபற்றச் செய்துள்ளதாகவும் மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment