கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் 22 மாலுமிகளுடன் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் 22 மாலுமிகளுடன் விடுவிப்பு

மேற்கு ஆப்பிரிக்க கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் ஜப்பானின் ஓசியன் டிரான்சிட் கேரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான , 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பெட்ரோலுடன் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் அந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. மாயமான கப்பலில் 22 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று பிணைத்தொகை செலுத்திய பிறகு கடற்கொள்ளையர்கள் கப்பலை விடுவித்தனர்.

No comments:

Post a Comment