மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை நாளை (06) மு.ப. 10.30 - பி.ப. 4.00 மணி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நண்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டமான, கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்ற போது, நாளைய தினம் (06) குறித்த விவாதத்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இரு அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் (டிசம்பர் 30, ஜனவரி 02) கையளிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment