நாட்டுக்கு தரம் குறைந்த பால்மாவை இறக்குமதி செய்யும் பால் மா நிறுவனங்களுக்கு எதிராக ஒருவார காலத்திற்குள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்பேவெல கால்நடை பண்னைக்கு விஜயமொன்றினை மேற்கொண்ட அமைச்சர் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
நாட்டுக்கு தேவையான பால் மாவை மாத்திரம் இறக்குமதி செய்யவும் பால் மா தொழிற்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம் யோக்கட் ஆகியவற்றுக்கான தரம் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், நாட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் பாலின் பாவனை 20 சதவீதமாக இருந்தது. தற்போது இது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment