கடந்த வருடத்தில் மீன் உற்பத்தியில் வளர்ச்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

கடந்த வருடத்தில் மீன் உற்பத்தியில் வளர்ச்சி

இலங்கையில் மீன்பிடி தொழிற்துறை மூலம் 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் மாத காலப்பகுதி வரையில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 750 மெற்றிக் டொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் நிலவிய வறட்சி காலநிலை கரையோர பகுதியில் நிலவிய கடும் மழை கடற்கொந்தளிப்புடன் காணப்பட்டவை முதலானவை மீன் உற்பத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் நாட்டில் மீன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையின் மூலம் தேசிய மீன் உற்பத்திக்கு 49.5 சதவீத பங்களிப்பு இடம்பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆழ்கடல் தொழில் மூலம் பெறப்பட்ட மீன் தொகையில் 9.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கரையோர கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோர் நாளாந்தம் நாட்டுக்கு தேவையான மீனை வழங்கி வருகின்றனர். நாளாந்தம் பொது மக்கள் புதிய மீன்களை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. விசேடமாக இதற்கு உதவி வரும் கடற்தொழில் கூட்டுதாபனத்தின் விற்பனை கிளையின் எண்ணிக்கையை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்திற்கு உட்பட்ட விற்பனை கிளைகள் 50 திறக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment