சொதுரு பியச நிவாரண கடன் திட்டத்தின் கீழ் நன்மையடையும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் 2020 ஆம் ஆண்டு அளவில் ஒரு இலட்சம் பேர் பயனடைய வேண்டும் என்பதே இதன் இலக்காகும்.
750 சதுர அடிக்கும் குறைவான வீட்டை விரிவுப்படுத்த அல்லது அதன் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய முயற்சிப்போர் நிதி வசதி இல்லாமை காரணமாக அதனை பூர்த்தி செய்யாமல் இருப்போருக்கு உதவும் வகையில் இரண்டு இலட்சம் ரூபா வரையிலான கடன் வழங்க சொதுரு பியச என்ற கடன் திட்டம் 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மூலம் முன்மொழியப்பட்டது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் இந்த கடன் திட்டத்தின் கீழ் 3354 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நகர பிரதேசங்களுக்கு அப்பால் உள்ள குறைந்த வருமானத்தை கொண்ட வீடுகளை கொண்ட உரிமையாளர்கள் பெரும்பாலானோரின் வீடுகள் 750 சதுர அடியை கொண்ட வீடுகளை கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு இந்த கடன் வசதிகள் கிடைப்பதில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்டத்திற்கு அமைவாக கவனத்தில் கொள்ளப்பட்ட குறைந்த வருமானங்களை கொண்டவர்களின் வீடுகளின் சதுர அடியை 1000 சதுர அடிகளாக அதிகரிப்பதன் மூலம் சொந்துறு பியச என்ற கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment