கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வட மாகாணத்தில் வீர வீராங்கனைகளின் ஆற்றலை மேம்படுத்த வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிளிநொச்சி விளையாட்டு மைதான கட்டிடத்தொகுதியின் பணிகள் தற்போது தடைப்பட்டுள்ளது.
இதனை துரிதமாக பூரணப்படுத்தி பொதுமக்களிடம் கையளிக்கும் நோக்கில் இதன் நிர்மாண பணிக்காக 141.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டுக்கான தொகையில் இதனை பூரணப்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தின் மூலம் இதற்காக பணியை மேற்கொள்ளும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment