வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் மகாறம்பைக்குளம் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவனின் தாயார் மீது நேற்று இரவு 7 மணியளவில் இனந்தெரியாத மூவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான 56 வயதான தர்மகுலசிங்கம் சத்தியதேவி என்பவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றிரவு 7 மணியளவில் மூவர் வீட்டிற்கு வந்து உங்களது மகன் எங்கே என கேட்டனர். நான் அவர் வீட்டில் இல்லை வெளியே சென்று விட்டார் என தெரிவித்தேன் . அவர் என்ன தேர்தலா கேட்கின்றார். அவனை வர சொல்லுங்க, வெட்டாம விட மாட்டேன் என கூறி விட்டு என்னை தகாத வார்த்தையினால் பேசினார்கள். அப்போது அவ்வாறு கதைக்க வேண்டாமென நான் தெரிவித்த போது எனக்கு தலைக்கவசத்தினால் அடித்து விட்டு, வீதியில் உங்கள் மகனை கண்டால் வெட்டுவோம், வீட்டுடன் கொழுத்துவோம் என அச்சுறுத்தி விட்டு தப்பித்து சென்று விட்டனர். என தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையோர் என சந்தேகத்தின் பேரில் 24 வயதான இராசரத்தினம் சுகந்தன் மற்றும் அமுதராசா நிஷாந்தன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிலொன்றையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த தாக்குதல் மற்றம் உயிர் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment