வரட்சி நிலவக்கூடிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நீர்த் தாங்கி பௌசர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

வரட்சி நிலவக்கூடிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நீர்த் தாங்கி பௌசர்கள்

வரட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீரை விநியோகிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய பிரஸ்தாப அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட நீர்த் தாங்கி பௌசர்கள் இன்று (03) அமைச்சரால் கையளிக்கப்பட்டது.

இதற்காக 4000 லீட்டர் முதல் 9000 லீட்டர் வரையிலான கொள்ளளவைக் கொண்ட 13 பௌசர் வண்டிகளுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 235 மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. இவை கடுமையான வரட்சி நிலவக்கூடிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment