வவுனியாவில் நாளை மத்திய பஸ் நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இளைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் பஸ் சேவைகளை மத்திய பஸ் நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை வவுனியா வர்த்தகர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சங்கத் தலைவர் ஆர். கிரிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றிலிருந்து வவுனியா மத்திய பஸ் நிலையம் வட மாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ் நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை தற்போதும் வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment