சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது. ஆனால், தற்போது மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வருவாயை அதிகரிக்க அரசாங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
இந்த வரிவிதிப்பு முறை நேற்று (ஜனவரி 1) முதல் இருநாடுகளிலும் அமுலுக்கு வந்துள்ளது. வற் வரி காரணமாக முதல் ஆண்டில், சுமார் 12 பில்லியன் திர்ஹம் (3.3 பில்லியன் டொலர்கள்) வருவாய் கிடைக்கும் என ஐக்கிய அரபு இராச்சியம் மதிப்பீடு செய்துள்ளது.
சவூதி அரேபியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருவாய் எண்ணெய் தொழிலிலிருந்து கிடைப்பதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அந்த வருவாய் கிட்டத்தட்ட 80 சதவீதமாக உள்ளது.
No comments:
Post a Comment