புதிய வருடத்தின் வரவேற்பும், சத்தியப்பிரமாணமும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வை முன்னிட்டு காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று நிகழ்வு ஆரம்பமானது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது . இதனைத்தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வினை தொடர்ந்து அரசாங்க உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment