ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வகையில் 15 வருடங்களுக்குப் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.
No comments:
Post a Comment