கலால் அதிகாரியின் வீட்டில் கைக் குண்டு வீச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

கலால் அதிகாரியின் வீட்டில் கைக் குண்டு வீச்சு

மாக்கந்துறையில் அமைந்துள்ள வடமேல் பிராந்தியத்துக்கான கலால் உதவி ஆய்வாளரின் வீட்டின் மீது இன்று (2) அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, உதவி ஆய்வாளர் லெஸ்லி ஜயந்த ரணவீர வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வீட்டில் இருந்த கராஜ்ஜிலேயே கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளதோடு, இதனால் மூன்று வாகனங்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலும், இதனுடன் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, பன்னல பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








No comments:

Post a Comment