நாட்டின் தேசிய இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

நாட்டின் தேசிய இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

பாதுகாப்பு அமைச்சின் புத்தாண்டினை வரவேற்கும் வைபவ ரீதியான ஆரம்ப செயற்பாட்டு நிகழ்வுகள் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமானது.

இதனைத்தொடர்ந்து செயலாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளினால் சத்திய பிரமாணமும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், அர்ப்பணிப்புடன் தமது வேலைகளை செய்யும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தத்துடன், ஜனாதிபதியினால் இவ்வாண்டு (2018) உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

அத்துடன், நாம் சிவில் சேவையாளர்கள் என்றவகையில் நாட்டின் தேசிய இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் கூறினார். மேலும்; வெற்றிகரமான மற்றும் வளமான ஆண்டுக்கான தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, மேலதிக செயலாளர்கள், கடற்படை தளபதி, கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர், இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment