அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கராச்சியில் ஒன்றுகூடியவர்கள் பாகிஸ்தானின் தேசியக்கொடிகளை தாங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். அத்துடன் அமெரிக்க தேசியக்கொடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒளிப்படம் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையாக பல பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டுள்ளபோதும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பொய் கூறி ஏமாற்றியுள்ளது. கடந்த 15 வருடங்களாக சுமார் 33 பில்லியன் டொலர் உதவித்தொகையை பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக அமெரிக்கா வழங்கியுள்ளது. ஆனால், இதனால் எந்தப் பயனுமில்லையென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டுவீட்டரில் நேற்று பகிர்ந்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அங்கு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு,
அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது: டுவிட்டிய ட்ரம்ப்
http://www.newsview.lk/2018/01/blog-post_16.html

No comments:

Post a Comment