போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையில் மட்டும் 45,000 பேர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையில் மட்டும் 45,000 பேர்

போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையில் மட்டும் சுமார் 45 ஆயிரம் பேர் இருப்பதாக ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. மேற்படி சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர ஃபெர்னாண்டோவே இத்தகவலை வெளியிட்டார்.

“நாட்டிலுள்ள 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு கிலோ ஹெரோயினைப் பயன்படுத்துகின்றனர். இதனடிப்படையில், வருடத்துக்கு ஏறக்குறைய ஒன்றரை டன் ஹெரோயின் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.

“தடை செய்யப்பட்ட போதை மருந்து என்பதால் பெரும்பாலும் ஹெரோயின் நாட்டுக்குள் கடத்தப்பட்டே கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கைக்குள் ஹெரோயின் எடுத்துவரப்படுகிறது.

“இது தவிர, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 500 ஹெக்டெயாருக்குச் சமமான பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது. “எனினும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இலங்கையை போதைப் பழக்கம் அற்ற ஒரு நாடாகப் பிரகடனப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை தற்போதைய அரசு ஆரம்பித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment