நீர்வேலி விபத்தில் 6 வயது சிறுமி உட்பட இருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

நீர்வேலி விபத்தில் 6 வயது சிறுமி உட்பட இருவர் பலி

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி உட்பட இருவர் பலியாகியுள்ளதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சகரவண்டி சாரதியான 57 வயது நிரம்பிய சிங்காரவேலு பாஸ்கரன் மற்றும் 6 வயதான ராஜ்குமார் டனிஸ்ரா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் ஹயஸ் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஹயஸ் வாகனமானது முன்னால் சென்ற வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே பருத்தித்துறையில் இருந்து யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதி தள்ளியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககதாகும். 


No comments:

Post a Comment