மஹிந்த தலை­மையில் பொது­ஜன பெர­மு­னவின் முதலாவது கூட்­டம்­ இன்று - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

மஹிந்த தலை­மையில் பொது­ஜன பெர­மு­னவின் முதலாவது கூட்­டம்­ இன்று

உள்­ளூராட்­சி­ மன்றத் தேர்­த­லுக்­கான ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் கன்னி பிர­ச்சாரக் கூட்டம் இன்று செவ்­வாய்­க்கி­ழமை பிற்­பகல் 3 மணிக்கு சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன் போது கூட்டு எதிர்க்கட்­சியின் தேசிய தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய கொள்கை திட்­டத்தை வெளியிட்டு வைக்க உள்ளார். 

தங்­கா­லையில் அமைந்­துள்ள கால்டர்ன் இல்­லத்தில் நேற்று திங்கட்கி­ழமை கூட்டு எதிர்க்­கட்சியின் சிரேஷ்ட உறுப்­பினர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து கலந்துரையா­டி­யுள்­ளனர். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவிசாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக்ஷ மற்றும் பஷில் ராஜ­பக்ஷ உள்­ளிட்­ட­வர்கள் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் அனைத்து வேட்­பா­ளர்­களும் இன்று அழைக்­கப்­பட்டு சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­ கொள்­ளவும், கட்­சியின் தேசிய கொள்கை திட்­டத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அறி­விக்­க­வு­மான தீர்­மானம் இந்த சந்­திப்பின் போது எடுக்­கப்­பட்­டது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறு­கையில் ,

தேசிய அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து முன்னெ­டுக்­கையில் அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எதிர்த்­தனர். இதனால் தான் சுயா­தீ­ன­மா­கவும் தனித்தும் செயற்­பட கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனுமதி வழங்­கினார்.

தொடர்ந்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஒட்­டிக்­கொண்டு தேசிய அர­சாங்­கத்தில் இருக்கும் போது தேர்­தல்­களில் எவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க முடியும். இதனால் கூட்டு எதிர்க்கட்சி தனித்து ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் மொட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­றது. இதனை தவறு என கூறு­வ­தற்கு சுதந்­திரக் கட்­சிக்கு தார்­மீக உரிமை கிடை­யாது. 

எனவே தான் உள்­ளூ­ராட்­சி­ மன்றத் தேர்­தலில் சுயா­தீ­ன­மாக செயற்ப­டு­கின்றோம். இதன் போது ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவிற்கு என்று தனித்­து­வ­மான தேசிய கொள்கை திட்டம் உள்­ளது. அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று வெளியிட்டு வைப்பார். நல்­லாட்சி அர­சா­ங்­கத்­திற்கு எதி­ரான பிரசார­மாகவே இது காணப்­படும்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­ மன்றத் தேர்­தலை பொறுத்த வரையில் வெற்றி இலக்­கு­களை அடை­வது உறு­தி­யாகும். கூட்டு எதிர்க் கட்சியில் செயற்­படும் சுதந்­திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குவும்  தயாராகவே உள்ளோம். தாமரை மொட்டு சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சார நடவ டிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment