உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தினமும் சராசரியாக 60,000 இருந்து 70,000 பேர் வரை தாஜ்மகாலை பார்வையிட்டு செல்கின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் சுற்றுச்சூழல் மாசு உருவாகி தாஜ்மஹாலின் நிறம் மாறி வருவதாக கூறப்படுகிறது.
இவற்றை தவிர்க்க தாஜ்மஹாலை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தாஜ்மஹாலை எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து தினமும் 40,000 பேருக்கு மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment