வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாம் எதிரியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட போதும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கானது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் ஏ.எம்.எம். றியால் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இன்றைய வழக்கு விசாரணையின்போது குறித்த வழக்கானது தற்போதும் சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு கொண்டு செல்லப்படும் நிலையில் இந்நபருக்கு ஏன் பிணை வழங்க மறுக்கக்கூடாது என்பது தொடர்பாக எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்வதற்கு இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் அதுவரை இந்நபரை விளக்கமறியிலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை குறித்த நபர் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ட்ரயலட்பார் நீதிமன்றால் இவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment