சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை 8.00 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். தூர இடங்களில் இருந்து வைத்திய சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment