இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் காயத்திற்கு உள்ளான அணித்தலைவர் ஷகிப் அல் ஹசனின் இடத்திற்கு அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அப்துல் ரஸ்ஸாக் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விரலில் காயத்திற்கு உள்ளான ஹகீப் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் 35 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரஸ்ஸாக் நான்கு ஆண்டுகளின் பின் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2014இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவே டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடினார்.
தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்ற அப்துர் ரசாக், பங்களாதேஷ் அணி சார்பில் முதற்தர போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment