மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் காரியாலயத்திற்கு முன்பாகவுள்ள உணவகத்தில் நிறுத்தி வைத்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த பட்டா (TATA) லொறி மீது பின்னால் வந்த டிப்பர் வண்டி மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்கான காரணம் டிப்பர் வண்டியினை செலுத்தி வந்த சாரதியின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்ததுடன், உணவகத்திற்கும் சிறு சேதங்கங்களும் இடம்பெற்றுள்ளன.
செங்கலடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வண்டியே இவ்வாறு மோதியதாகவும் சாரதியின் கவனயீனமே இவ்விபத்து நிகழ்வதற்கான காரணம் எனவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment