தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவருகின்ற அடைமழை காரணமாக பல நீர் ஓடைகள் நிரம்பி வழிவதனால் ஓடையிலுள்ள நீர்களை கடலுக்குள் வழிந்தோடுவதற்காக முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ள நிலையில் வாவிகள் வழியாக முதலைகள் கடலுக்குள் செல்வதனால் தற்போது காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் ஆங்காங்கே முதலைகள் தென்படுவதாக இன்று (04) காலை கடலுக்குச்சென்ற மீனவர் ஒருவர் தெரித்தார்.
மேலும் இம்முதலைகளை பார்வையிடுவதற்காக காத்தான்குடி கடற்கரைக்கு அதிகளவான மக்கள் வருகை தருவதாகவும், கரையோரத்திலுள்ள மக்கள் சிறு அச்சத்துடனும் காணப்படுகின்றனர்.
முதலைகளானது நீரிலும் நிலத்திலும் வாழக்குடிய திறமை கொண்ட ஓர் உயிரினமாகும். எனவே கடல்களில் முதலைகள் வாழ்வது கிடையாது. ஆறுகள் மற்றும் குளங்களில் மாத்திரமே முதலைகள் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது கடலுக்குள் வருகை தந்த முதலைகள் கடல் அலை காரணமாக கரைகளுக்கு வந்து செல்வதனால் கரையோர மக்கள் சிறு பதட்டத்துடனும் காணப்படுகின்றனர்.
சஜீத் (ஸா)
பட உதவி அஸ்லம் இன்ஸாப்
No comments:
Post a Comment