கோயிலை அவமதித்த கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அமைச்சர் மனோ குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 30, 2017

கோயிலை அவமதித்த கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அமைச்சர் மனோ குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம, காலனித்துவ ஆளுநரின் மனைவியைப் போல் நடந்துகொள்வதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை, மூதூரில் உள்ள கோயில் ஒன்றில் செருப்பு அணிந்தபடி கோயில் வளாகத்துக்குள் வந்த அவரை, செருப்பைக் கழற்றிவிட்டு வருமாறு பெண்கள் சிலர் கூறியிருந்தனர். 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்துக் கடவுளரையும் அங்கு கூடியிருந்த இந்து பக்தர்களையும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார் தீப்தி. அதை எதிர்த்து பெண்கள் கூக்குரலிட்டனர். இந்தக் காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக் காட்டிய அமைச்சர் மனோ கணேசன் தீப்தியின் நடவடிக்கைகள் இன நல்லிணக்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார். தீப்தியுடன் வந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் பாதணிகளைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment