சிவனொளி பாதமலைக்கு கஞ்சா போதைப்பொருளை தம்முடன் எடுத்துச் சென்ற நால்வரை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிவனொளி பாதமலை பருவகாலம் நேற்று உதயமான பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமானது.
ஆரம்பமான முதல் தினத்திலிலேயே 750 மில்லிகிராம் கஞ்சா போதை பொருள் கொண்டு சென்ற நான்கு பேரை நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்திய மாகாண கலால் திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி, நுவரெலியா கலால் திணைக்கள அதிகாரி உபுல் செனவிரத்தன, அட்டன் கலால் திணைக்கள அதிகாரி திலக்கரத்ன ஆகியோரின் வழிகாட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புசல்லாவை பகுதியிலிருந்து சிவனொளிபாத மலையினை தரிசிக்க வருகை தந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் நீதிவான் முன்னலையில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் கலால் தினைக்களத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment