பிரித்தானிய இளவரசர் ஹரியினதும் அவரது காதலி மெகான் மெர்கிளினதும் திருமணம் 7 வருடங்களுக்கு மேல் நீடிக்காது எனத் தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லண்டன் தேவாலய ஆயர் ஒருவர் திருமணத்தில் இணையப் போகும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துள்ளார்.
லண்டன் தேவாலயத்தின் பிரதி ஆயரான பீற் புரோட்பென்ட்டிடம் (65 வயது) நீங்கள் எதிர்வரும் ஆண்டு திருமண பந்தத்தில் இணையவுள்ள ஹரி மற்றும் மெகானுக்கு அவர்களது மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறீர்களா என வினவப்பட்ட போது, தான் இது தொடர்பில் எவ்வித விமர்சனத்தையும் செய்வதற்கு தற்போது விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரித்தானிய கன்டர்பரி பேராயரான ஜஸ்டின் வெல்பி மற்றும் அமெரிக்க நியூயோர்க் நகர பேராயர் ஜோன் சென்தமு ஆகிய சிரேஷ்ட மதகுருமார் இளவரசர் ஹரி மற்றும் மெகான் திருமண பந்தத்தில் இணைவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2011ஆம் ஆண்டில் இளவரசர் ஹரியின் சகோதரரான இளவரசர் வில்லியத்தின் திருமணம் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஆயரான பீற் புரோட்பென்ட்டுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
அவர் இளவரசர் வில்லியத்தையும் அவரது துணைவியான கத்தரீனையும் வெறுக்கத்தக்க பிரபலங்கள் எனவும் நல்லெண்ணமின்றி காதல் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டதையடுத்தே அவருக்கு அந்தத்திருமணத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment