அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான சுபாயான் மற்றும் காமில் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மன்னார் மரிச்சிக்கட்டி முள்ளிக்குளம் கிராமத்திற்கு 5000 லீட்டர் குடிநீர் தங்கி மற்றும் றிப்கான் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கதிரைகள் மற்றும் நிவாரணப்பொதிகள் என்பன அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்களும் சிறப்பு விருந்தினராக அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முழுமையாக பங்குபற்றிய முள்ளிக்குள மக்கள் இதற்கு முன்னதாக அமைச்சர் தங்களுக்கு வீடுகள் வழங்கியதற்கும் குடிநீர் வசதிகள் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment