வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானவுடன் சந்திப்பு. - News View

About Us

About Us

Breaking

Sunday, December 3, 2017

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானவுடன் சந்திப்பு.



கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அலிசாஹிர் மௌலான அவர்களை 2017.12.02ஆம்திகதி - சனிக்கிழமை அவரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை சம்மந்தமாகவும், வைத்தியசாலையினை தரமுயர்துவதற்கு அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்களையும் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இன்றுவரை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோரை அபிவிருத்திக் குழுவினர் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார்.

No comments:

Post a Comment