முன்னாள் ஜனாதிப மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 3, 2017

முன்னாள் ஜனாதிப மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை!

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றார். 

இந்நிலையில் தமது அணியிரனுக்கும் தனக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் அதிகரித்து தருமாறு அவர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு பிரிவின் மூலமாகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment