மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறியக்கோரி ஹட்டனில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறியக்கோரி ஹட்டனில் போராட்டம்

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு சென்று உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி மலையக மக்கள் முன்னணியின் பெண்கள் பிரிவு ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (18) ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இடம் பெற்றது.

இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன் செயலாளர் விஜயசந்திரன், நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட மலையக மக்கள் பெண்கள் முன்னணியின் பெண்கள் பிரிவினர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டக்காரர்கள் பெண் வன்முறைக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிப்போம். போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் டயகம மூன்றாம் பிரிவை சேர்ந்த சிறுமி ஒருவர் கொழும்புக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அவ்வாறான ஓர் நிலையில் இறந்த சிறுமிக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்பாட்டத்தினை மலையக மக்கள் முன்னணியின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. 

பொருளாதார நிலமை என்பது உலகம் முழுவதும் காணப்படுகின்ற போதிலும் மலையக பெண்களின் தன்மானத்தை இழக்க முடியாது. ஆகவே இதற்கு முன்பும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 

ஆகவே இவை அனைத்துக்கு நீதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment