பதவி நீக்கம் செய்யப்பட்டார் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

பதவி நீக்கம் செய்யப்பட்டார் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர்

'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்த கால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக்குழு வியாழக்கிழமை தெரிவித்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது.

கோபயாஷியின் இக்கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்ப்பு நகைச்சுவைகள் என்று கண்டனம் செய்யப்பட்டது.

“எந்தவொரு நபருக்கும், எவ்வளவு ஆக்கபூர்வமாக இருந்தாலும், நாஜி இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்ய உரிமை இல்லை. நாஜி ஆட்சி ஜேர்மனியர்களையும் குறைபாடுகள் கொண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த நபரின் எந்தவொரு தொடர்பும் 6 மில்லியன் யூதர்களின் நினைவை அவமதிக்கும் மற்றும் பாராலிம்பிக்கை கொடூரமாக கேலி செய்யும்” என்றும் விமர்சகர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

ஜப்பானிய ஊடக அறிக்கையின்படி, கோபயாஷி 1998 ஆம் ஆண்டில் தனது நகைச்சுவை நடிப்பிற்காக ஒரு ஸ்கிரிப்ட்டில் 6 மில்லியன் யூதர்களை நாஜிகளால் படுகொலை செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டினார், இதில் “ஹோலோகாஸ்ட் விளையாடுவோம்” என்று கூறினார்.

ஹோலோகாஸ்ட் (பெரும் இன அழிப்பு) என்பது 1950 களில் வரலாற்று ஆய்வாளர்களால் ஈப்ரூ மொழி சொல்லான சோகோ என்பதன் மொழிபெயர்ப்பாக யூத இனப்படுகொலையைக் குறிப்பாக சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad