சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் - ஜாக்கி சான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் - ஜாக்கி சான்

நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர் ஜாக்கி சான்.

ஹொங்கோங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல திரைப்படங்களை ஹொங்கோங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, ஹொங்கோங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. இதை எதிர்த்து ஹொங்கோங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்றுமுன்தினம் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad