கொலம்பியாவில் ராணுவ கட்டடம் வெடி வைத்து தரை மட்டமாக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

கொலம்பியாவில் ராணுவ கட்டடம் வெடி வைத்து தரை மட்டமாக்கப்பட்டது

கொலம்பியாவில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான கட்டடம், வெடி பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 59 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை தலைமையகமாக விளங்கியது. 

மிகவும் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் ஸ்திரத்தன்மையற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை இடித்துவிட்டு ராணுவத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரமாண்டமான அந்த கட்டிடம் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. 

கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் வைக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் நொடிப் பொழுதில் அந்த கட்டடம் இடிந்து தரை மட்டமாகி புழுதி கிளம்பியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.

No comments:

Post a Comment