சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவே கடுமையான முறையில் தனிமைப்படுத்தல் சட்டம் - அமைச்சர் ரோஹித - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவே கடுமையான முறையில் தனிமைப்படுத்தல் சட்டம் - அமைச்சர் ரோஹித

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அரசாங்கம் கடுமையான முறையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துகிறது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவத்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவில் அமைப்பினரும், தொழிற்சங்கத்தினரும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கும் போராட்டம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad