சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவர் ஜப்பானில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அதன்படி ஒலிம்பிக்கிற்காக டோக்கியோவிற்கு வெளியே உள்ள நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கொவிட்-19 நேர்மறையை சோதித்த முதல் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உறுப்பினராக தென் கொரியாவின் ரியு சியுங்-மின் பதிவானர்.

முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரரும், சர்வதேச ஒலிம்பிக் குழு தடகள ஆணைய உறுப்பினருமான ரியூ, நரிட்டா விமான நிலையத்திற்கு வந்ததும் கொரோனா தொற்றுக்குள்ளானமை சோதனைகளில் கண்டறியப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவில் உறுதிப்படுத்தினார்.

ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்பு ரியூவுக்கு தென் கொரியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறை சோதனைகளிலும் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையாக பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்சமயம் அவர் தனிமைப்படுத்தலுக்காக ஜப்பானில் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமை, ஒலிம்பிக் கிராமத்தின் குடியிருப்பாளர் ஒருவர் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்திருப்பதை அமைப்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

டோக்கியோ விரிகுடாவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் போட்டிகளில் பங்கெடுக்கும் சுமார் 11,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக் இந்த வாரம் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் ஜப்பானியர்களுக்கோ அல்லது கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கோ வைரஸ் பரவுவதற்கான ஆபத்து ‘பூஜ்ஜியம்’ எனக் கூறினார்.

No comments:

Post a Comment