அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இதுதான்...! - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இதுதான்...!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரிவான போச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்றாலும், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஒரு முடிவினை எடுக்கப் போவதில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு அவரது முடிவு அல்ல‍, அது அமைச்சரவை எடுத்த முடிவு. எனவே இந்த முடிவுக்கு அமைச்சர் கம்மன்பில மட்டும் பொறுப்பேற்க முடியாது ஏனெனில் இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் எடுக்கப்பட்டது என்றும் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை தொடர்பான தமது இறுதி நிலைப்பாட்டுக்காக தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று கட்சி கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad