புனித ஹஜ் பெருநாளன்று குர்பானை எந்த தடையுமின்றி மேற்கொள்ள முடியும், வழக்கம் போன்று தைரியமாக செய்யுமாறு உறுதியளிப்பு : தேவையற்ற சுற்றுநிருபங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்த இணைப்புச் செயலர் சத்தார் அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

புனித ஹஜ் பெருநாளன்று குர்பானை எந்த தடையுமின்றி மேற்கொள்ள முடியும், வழக்கம் போன்று தைரியமாக செய்யுமாறு உறுதியளிப்பு : தேவையற்ற சுற்றுநிருபங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்த இணைப்புச் செயலர் சத்தார் அறிக்கை

புனித ஹஜ்ஜுப் பெருநாளன்று குர்பானை எந்த தடையுமில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பதுடன் அதை வழக்கம் போன்று தைரியமாக செய்ய முடியுமென்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அதேவேளை குர்பான் தொடர்பில் முஸ்லிம்களிடத்திலும் ஏனைய சமூகங்களிடத்திலும் பிரச்சினைகள் ஏற்படும் வகையில் அடிக்கடி தமது அதிகாரத்தை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து சுற்றுநிருபங்கள் வெளியிட்ட அதிகாரிகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம்கள் உள்ளுராட்சி மன்றத்தினால் விதிக்கப்பட்ட சட்ட நடைமுறைகளையும் கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளையும் பேணி தங்களது குர்பான் நடவடிக்கைளில் ஈடுபட முடியும். இது தொடர்பில் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டதால் அரசாங்கத்தின் மீது தப்பிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் அவை உள்ளன. 

இம்முறையும் எவ்வாறு வழமையாக நாங்கள் குர்பானை கொடுத்தோமோ அவ்வாறே பிரச்சினையின்றி எமது மார்க்கக் கடமையான உழ்ஹிய்யாவை வழங்க முடியும். இது தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் பல்வேறு கருத்துக்களைப் பரப்பி பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளார்கள். அவர்களுக்கு எந்த சட்ட அங்கீகாரமுமில்லை என்றார்.

ஏனைய சமூகங்களுக்கு பிரச்சினைகள் எழாமல் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குர்பானை கொடுக்க நாங்கள் முன்வருதல் வேண்டும். மாடுகள் கொண்டு செல்லும் போதும் கழிவுகளை அகற்றும்போதும் மிகக் கவனமாக கையாளுதல் அவசியமாகும். ஏனைய சமூகங்களுக்கோ சுற்றாடலுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு அவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad