வைத்தியர்கள், தாதியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஆரம்பம் - பவித்ரா வன்னியராச்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

வைத்தியர்கள், தாதியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஆரம்பம் - பவித்ரா வன்னியராச்சி

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்திசாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 500 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சுகாதார அமைச்சரின் தலைமையில் இரத்தினபுரி பிரதேச சபையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதற்கமைய கொவிட்-19 வைரஸ் பரவல் அவதானம் காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 8 வைத்தியசாலைகளுக்கு 5 கோடி ரூபா பெறுமதியிலான வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொலன்ன ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, கலவான ஆதார வைத்தியசாலை, கஹவத்த ஆதார வைத்தியசாலை, பொதுபிடிய பிரதேச வைத்தியசாலை, மாரதென்ன பிரதேச வைத்தியசாலை, கொடகவெல பிரதேச வைத்தியசாலை மற்றும் ரக்வான பிரதேச வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment