ஹஜ் கொத்தணி ஒன்றினை முஸ்லிம்கள் உருவாக்கி விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் அளாகாது, அவதானமாக நடக்க வேண்டும் - என்.எம்.அமீன் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

ஹஜ் கொத்தணி ஒன்றினை முஸ்லிம்கள் உருவாக்கி விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் அளாகாது, அவதானமாக நடக்க வேண்டும் - என்.எம்.அமீன்

முஸ்­லிம்கள் கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளையும் அது தொடர்­பான சட்ட திட்­டங்­க­ளையும் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்­க­ வேண்டும் எனவும் ஹஜ் பெருநாள் தினத்தில் இவ்­வி­ட­யத்தில் மிக அவ­தா­ன­மாக நடந்து கொள்ள வேண்­டு­மெ­னவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார்.

இவ்­வி­ட­யத்தில் முஸ்­லிம்கள் அச­மந்­தப்­ போக்­குடன் செயற்­பட்டால் ‘ஹஜ் கொத்­தணி’ ஒன்­றினை முஸ்­லிம்கள் உரு­வாக்­கி­ விட்­டார்கள் என்ற பழிச்­ சொல்­லுக்கு நாம் ஆளா­வ­துடன் பல பிரச்­சி­னை­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார். 

சவூதி அரே­பியா இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­குக்­கூட கடு­மை­யான கட்டுப்பா­டு­களை விதித்­துள்­ளதை நாம் மனதில் கொண்டு செயற்­பட வேண்­டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற கூட்­டத்தில் அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஷில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் டாக்­டர்கள் வக்பு சபை பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

இதன்­போது கொவிட் கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad