கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி மாத்திரம் விதிவிலக்கல்ல என்கிறார் பவித்ரா - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி மாத்திரம் விதிவிலக்கல்ல என்கிறார் பவித்ரா

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதில் ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி ஆகியோர் மாத்திரம் விதிவிலக்கல்ல ஆகவே போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெறும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பூகோளிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் மருந்து இதுவரையில் உலகில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

வைரஸ் தொற்று தொற்றாமல் இருப்பதற்காக மாத்திரமே தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் எந்தளவிற்கு சாத்தியமாக அமையும் என்பது இதுவரையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad